கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் அடுத்த அனுசோனை கிராமத்தை சேர்ந்த கோபால்(வயது 58) என்ற விவசாயி ஆடு, கோழி, முயல் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த 4 பேர், அவரை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கோபாலின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தியபோது, காரில் வந்த நபர்கள் கடந்த சில நாட்களாக கோபாலுக்கு சொந்தமான இடத்தில் சூட்டிங் நடத்த அனுமதி கேட்டு வந்தனர் என்பதும், அதற்கு கோபால் மறுப்பு தெரிவித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-forcibly-abducted-in-a-car-sensation-near-hosur




