வேலூர், பிகிலுக்கு ஓட்டுப் போட்டல. இப்ப திகில் திகில்னு விலை ஏறுது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ். பாரதி, தி.மு.க.-வைப் பார்த்து விஜய் சவால் விடுகிறார். பைல்ஸ் எல்லாம் தயாராகத் டேபிளில் இருக்கின்றன, நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னுடைய வேலை; இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் எங்களிடம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்று கூறுகிறார். ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சிஏஜி (CAG) அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை. அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த 3 பைல்ஸ் எந்தவொரு சி.ஏ.ஜி அறிக்கையும் அரசாங்கத்தைப் பாராட்டியிருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை அனைத்துத் தளங்களிலும் வழக்கமாக நடக்கக் கூடியது. ஆனால், ஊடகங்களும் பத்திரிகைகளும் உடனே 3 பைல்கள் இருக்கின்றன என்று பரபரப்பாக்குகின்றன. பிகிலுக்கு ஓட்டுப் போட்டீர்கள். இப்போது திகில் திகில் என விலைவாசி ஏறுகிறது. இன்றைக்கு மக்களுக்கு இது தெரியாது. இன்னும் 6 மாதம் ஆகட்டும். இதே மக்கள் வந்து துரைமுருகனின் வீட்டு வாசலில் நின்று, 'காவல் தெய்வமே. நீங்கதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று கையேந்தி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-vote-for-bigil-now-the-price-is-going-up-like-crazy-rs-bharathis-criticism




