சென்னை, நாட்டின் முதல் 'வந்தே பாரத்' சரக்கு ரெயில், மத்திய பிரதேச மாநிலம் கதிரூ - மஹ்பூ இடையே மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்யப்பட்டது. சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரெயில்கள், பயணியரிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 'வந்தே பாரத் பார்சல்' ரெயில் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றன. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில், மணிக்கு 160 கி.மீ., வேகம் செல்லும் திறன் கொண்டது. உணவு பொருட்கள் பதப்படுத்தும் வசதி, பொருட்களை பாதுகாப்பாக கையாளும் வசதிகள் உள்ளன. இந்த ரெயில், கடந்த மார்ச் மாதத்தில் ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து,, நாட்டின் முதல் வந்தே பாரத் சரக்கு ரெயில் மத்திய பிரதேசத்தில் கதிரூ - மஹ்பூ இடையே, கடந்த சில வாரங்களாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/countrys-first-vande-bharat-freight-train-successfully-test-run




