சென்னை, உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை நிர்ணயிக்க கூடாது. கவர்ச்சி என்பது எல்லைகள் கொண்டது. அதனை யாருமே மீற மாட்டார்கள். அது நடிகைகளுக்கு நன்றாகவே தெரியும் என்று நடிகை ரைசா வில்சன் தெரிவித்துள்ளார். கவனம் ஈர்த்த நடிகை 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரைசா வில்சன், அதனைத்தொடர்ந்து 'எப்.ஐ.ஆர்.', 'பொய்க்கால் குதிரை'. 'காபி வித் லவ்', 'மிஸ்டர் எக்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது மைலோ இயக்கத்தில் 'நோவா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. வருத்தம் தெரிவித்த ரைசா வில்சன் ரைசா வில்சன் சமீபகாலமாக அணியும் கவர்ச்சி உடைகள் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது, "நடிகைகள் கவர்ச்சியாக உடைகள் அணிந்தாலே விமர்சிக்கும் போக்கை கைவிடுங்கள். உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை நிர்ணயிக்க கூடாது. கவர்ச்சி என்பது எல்லைகள் கொண்டது. அதனை யாருமே மீற மாட்டார்கள். அது நடிகைகளுக்கு நன்றாகவே தெரியும். 'பிகினி' அணிந்தாலும் திட்டுகிறார்கள் இதைவிட கொடுமை என்னவென்றால், வெளிநாட்டில் 'பிகினி' அணிந்தாலும் திட்டுகிறார்கள். மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவள் நான். கவர்ச்சி உடைகள் என்று நீங்கள் சொன்னாலும், அது எனக்கு ஒரு சாதாரண உடைதான். எனவே உடைகள் விஷயத்தில் குறைகள் சொல்லாதீர்கள்", என்று ரைசா வில்சன் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dont-judge-actresses-based-on-their-outfits-raiza-wilson-expresses-anguish




