சென்னை, நாட்டின் முதன்மையான காற்றாலை மின்சார வர்த்தக கண்காட்சி மற்றும் விண்டர்ஜி இந்தியா மாநாடான 2026 அக்டோபர் 7-ம் தேதி முதல், 9-ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது." என, ஐ.டபிள்யூ. டி.எம்.ஏ. எனப்படும் இந்திய காற்றாலை மின்சாதன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் அதன் துணை தலைவர் சரவணன் மாணிக்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இந்தியாவின் காற்றாலை மின்நிலைய நிறுவுதிறன் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி கண்டு 58 ஜிகா வாட்டை எட்டியுள்ளது. வரும், 2030-க்குள், 100 ஜிகாவாட் என்ற இலக்கை எட்டுவதற்கு தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 'விண்டர்ஜி மாநாடு 2026' சென்னை வர்த்தக மையத்தில் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 350 காட்சி மற்றும் மேற்பட்ட கண் அரங்குகள் 30-க்கும் நாடுகளின், 400-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 20,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். பழைய காற்றாலைகளை புதுப்பிக்கும் திட்டம் வாயிலாக தமிழகத்திற்கு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. நாடு முழுதும் மேம்படுத்தப்பட வேண்டிய 25.40 ஜிகா வாட் பழைய காற்றாலைகளில், தமிழகத்தில், 7.40 ஜிகா வாட் காற்றாலைகள் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/wind-energy-conference-in-chennai-a-3-day-event




