கொழும்பு, இலங்கை, பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இலங்கை வெற்றிபெற்றது. பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதையடுத்து நேற்று முன் தினம் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது. 2வது டி20 இந்நிலையில், இலங்கை - பாகிஸ்தான் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. தம்புலாவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷாவல் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இலங்கை வெற்றி இதனை தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 17.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய இலங்கையின் சஞ்சனா அதிகபட்சமாக 46 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 நாளை மறுதினம் நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-t20-sri-lanka-stun-pakistan-with-resounding-win




