நீலகிரி, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பால நந்தகுமார் உள்ளார். வக்கீலான இவருக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாவட்ட செயலாளர் பதவி வழங்கினார். பின்னர் அடுத்த சில நாட்களில் அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த கப்பச்சி வினோத் த.வெ.க.வில் இணைந்ததால், பால நந்தகுமார் 2-வது முறையாக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் திடீரென தனது மீசையை எடுத்துக்கொண்டார். இதற்கான காரணம் மற்றும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு உள்ளார். அதில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பிரசார மேடைகளில் த.வெ.க. 10 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றால் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என சவால் விட்டிருந்தேன். மாயாஜாலம் ஏதோ செய்து, 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டார்கள். 100 நாள் ஆட்சி நிறைவுற்ற பிறகு நண்பர்கள் சிலர் நினைவுபடுத்தியதை தொடர்ந்து, தற்போது மீசையை எடுத்துக்கொண்டேன் என குறிப்பிட்டு உள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-win-more-than-10-seats-challenge-moustache-removed-by-aiadmk-secretary



