பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தனது மனைவி ஹரினி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தவர், அபிநந்தன். இவர் தனது மகனுடன் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து ஹரினி போலீஸாரை தொடர்பு தனது கணவரும், மகனும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை என்று தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இருவரும் இறந்திருந்தனர். அபிநந்தனின் காது வழியாக ரத்தம் வந்து இருந்தது. இது குறித்து போலீஸார் அபிநந்தன் மனைவி ஹரினியிடம் விசாரித்தபோது, ஆரம்பத்தில் இதில் தனக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தார். மேற்கொண்டு தீவிர விசாரணையில் அவரும் அவரது காதலனும் சேர்ந்து இக்கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ''நேற்று இரவு இருவருக்கும் இடையே படுக்கை ஏற்பாடுகள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹரினி வீட்டில் இருந்த கரண்டியை எடுத்து தனது கணவனை தாக்கிவிட்டு வேறு ஒரு அறைக்குச் சென்று படுத்துக்கொண்டார். நள்ளிரவில் தனது காதலன் வினய் என்பவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரச் செய்துள்ளார். வீட்டில் அபிநந்தன் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரை கழுத்தை நெரித்தும் தாக்கியும் கொலை செய்துள்ளனர். இத்தாக்குதலில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவர்களின் 4 வயது மகன் எழுந்தான். உடனே அவனையும் ஹரினி வீட்டில் இருந்த தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார். ஹரினியின் காதலன் வினய் தப்பிச்சென்றுவிட்டார். அவரை தேடி வருகிறோம்" என்று போலீஸார் தெரிவித்தனர். வினய் வீட்டிற்கு வந்தபோது அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆஃப் செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த ரத்தக்கரையை ஹரினி துடைத்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/pillow-used-on-son-woman-murders-husband-and-4-year-old-son-with-the-help-of-her-lover



