குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சங்கீதா (7) என்ற சிறுமி, 2009ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாபுநகரில் வசித்து வந்த சங்கீதா பக்கத்து வீட்டில் விளையாடச் சென்று, பின்னர் தனது வீட்டிற்கு அருகில் ஐஸ் கோலா வாங்கச் சென்றார். அங்கிருந்து அவர் காணாமல் போனார். மூன்று நாள்களுக்குப் பிறகு, அவர் உடல் அருகிலுள்ள அரசுப் பள்ளியின் பொதுக் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டது உறுதியானது. இக்கொலை தொடர்பாக விசாரித்த போலீஸார், அப்பகுதியைச் சேர்ந்த செக்யூரிட்டி கார்டு ஒருவரை கைதுசெய்தனர். ஆனால் இறுதியில் அவர் குற்றவாளி இல்லை என்று தெரியவந்தது. அதேசமயம் கடந்த 17 ஆண்டுகளாக குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. கொலைசெய்யப்பட்ட சிறுமியின் ஆடைகளை தடயங்களாக போலீஸார் பாதுகாத்து வைத்திருந்தனர். சிறுமியின் தந்தை போபாஜி தனது மகளுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வந்தார். தொண்டு நிறுவனம், மனித உரிமை கமிஷன் மற்றும் பிரதமர் அலுவலகம் என தொடர்ந்து ஒவ்வோர் இடத்திலும் முறையிட்டுக்கொண்டே இருந்தார். அவரது இடைவிடாத முயற்சி காரணமாக இவ்வழக்கு 2024ம் ஆண்டு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புதிதாக விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள், கொலை செய்யப்பட்ட போது சிறுமி அணிந்திருந்த ஆடையை மறு ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் அந்த ஆடையில் 4 முடிகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அந்த முடிகளை மீட்டு டி.என்.ஏ.பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதோடு அந்த முடிகளின் அடிப்படையில் போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரை பிடித்துச் சென்று விசாரித்து வந்தனர். அவர்களில் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய இரண்டு பேரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சங்கீதாவின் உடையில் கண்டுபிடிக்கப்பட்ட முடி இந்த இரண்டு பேரில் ஒருவரது முடியாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ பரிசோதனை முடிவு வெளியான பிறகுதான் இதற்கு விடை கிடைக்கும். கடந்த 17 ஆண்டுகளில் இவ்வழக்கு தொடர்பாக போலீஸார் 150 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/17-years-on-recovery-of-4-hair-strands-puts-cops-on-trail-of-7-yr-old-girls-killer




