சென்னை, சில நாட்களாக ஓய்வில் இருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது உடல்நலம் தேறி மீண்டும் தனது சினிமா பணிகளை தொடங்க உள்ளார். “நான் விரைவில் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறேன்” என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'மைசா' படத்தில் ராஷ்மிகா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் 'மைசா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான 'மைசா' படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக முக்கிய சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடிக் காட்சிகளின் படப்பிடிப்பை அவர் அண்மையில் முடித்திருந்தார். படப்பிடிப்பின்போது காயம் இதற்கிடையில், சமீபத்தில் கேரளாவில் நடந்த படப்பிடிப்பின்போது நடன மாடிக்கொண்டிருந்த ராஷ்மிகா தவறி கீழே விழுந்ததில் தொடை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. தசைநார் கிழிவு பிரச்சினையால் அவர் 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்கவும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இனி மிஷின் போல இயங்குவது தவறு. தொடர் வேலைகளுக்கு இடையே கடவுள் எனக்கு கொடுத்த கட்டாய ஓய்வு' என்று ராஷ்மிகா தெரிவித்திருந்தார். மீண்டும் வேலைக்குத் திரும்புகிறேன் இந்த நிலையில், சில நாட்களாக ஓய்வில் இருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது உடல்நலம் தேறி மீண்டும் தனது சினிமா பணிகளை தொடங்க உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் விரைவில் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறேன். நிச்சயமாக, இவை அனைத்தையும் நான் மிகவும் மிஸ் செய்வேன்!” என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், விளையாட்டு பொருட்கள், நாய், சாமி சிலை, மயில் என சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-will-be-back-to-work-soon-rashmika-mandannas-heartfelt-post




