கோட்டயம், கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூரை சேர்ந்த அனில்குமார்-சூர்யா தம்பதிக்கு ஆதிரா, ஆர்யா என்ற இரட்டை பெண் குழந்தைகள். அந்த சகோதரிகளுக்கு தற்போது 25 வயதாகிறது. பள்ளி படிப்பை முடித்த இருவரும் படிப்பில் ஒரே துறையை தேர்ந்தெடுத்தனர். அதாவது செவிலி யர் படிப்பை முடித்த இருவரும், பிறகு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றினர். இந்தநிலையில் மண வாழ்க்கையும், இருவருக்கும் ஒரே நாளில் நடந்தது. அதாவது கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி இரட்டை சகோதரிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. கருவற்றா பகுதியை சேர்ந்த அகிலேஷ் குமாரை ஆதிராவும், மாவேலிக்கரையை சேர்ந்த சிரன் மோகனனை ஆர்யாவும் மணமுடித்தனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது கணவருடன் வெளிநாடு சென்றனர். ஆதிரா கத்தாரில் உள்ள தோஹா கிளினிக்கில் நர்சாகவும், ஆர்யா ஓமனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியிலும் வேலை பார்த்தனர். இதற்கிடையே இருவரும் கர்ப்பம் தரித்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி இருவரும் ஒரே நாளில் சில மணி நேர இடைவெளியில் அழகான பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். குழந்தைக ளுக்கு பெயர் சூட்டும் விழாவிற்காக கடந்த 20-ந் தேதி இருவரும் தங்களது கணவர் மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான கோட்டயம் திருவஞ்சூருக்கு வந்தனர். அங்கு ஆர்யா-சிரன் மோகனன் தம்பதி மகளுக்கு நிதாரா என்றும், ஆதிரா-அகிலேஷ்குமார் தம்பதி மகளுக்கு நிவேத்யா எனவும் பெயர் சூட்டினர். இந்த அரிய நிகழ்வு அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/wedding-on-the-same-day-childbirth-on-the-same-day-a-rare-event-for-twin-sisters




