இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை குரல் பாதிப்பு ஆகியவற்றை சரி செய்யும் எளிய மருந்துகளை பார்ப்போம். ஆடாதோடை இலை-2, மிளகு -5 இதை பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் இவைகளில் ஒன்றுடன் மென்று சாப்பிட வேண்டும். சின்ன வெங்காயம் -5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும். பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிடலாம். சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். மூலிகை மாத்திரை பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும். வெந்நீரில் உப்பு சேர்த்து வாய், தொண்டையை கொப்பளிக்க வேண்டும். மூலிகை மாத்திரையான தாளிசாதி வடகம் -1 அல்லது 2 மாத்திரை கடித்து சாப்பிட வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். - தகவல்: டாக்டர் மானெக்சா. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/health/home-remedies-to-relieve-sore-throat-and-throat-irritation




