சென்னை, தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது என கர்நாடகா முதல்-மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார். தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மேகதாது அணை தமிழகத்துக்காக கட்டப்படுகிறது. கர்நாடகாவிற்காக அல்ல, மேகதாது அணை மூலம் கர்நாடகாவுக்கு 5 டிம்சி தண்ணீரையே பயன்படுத்த உள்ளோம். பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை கருதியே மேகதாது அணை கட்டப்படுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் குடிநீருக்காக 5 டிஎம்.சி நீரை எடுத்துக்கொண்டு எஞ்சியதை தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வழங்குவோம் என்றார். முன்னதாக, மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன்.மேகதாது அணையின் ஒவ்வொரு சொட்டு நீரும் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கு உதவும்.நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும் என அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-is-for-the-benefit-of-tamil-nadu-karnataka-chief-minister-shivakumar



