வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 16 நாட்களில் ரூ 240 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதை வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் 40 வயது தொழிலதிபரான சூர்யா, அக்குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை உடல்நலக் குறைபாட்டைக் குணப்படுத்தப் போராடுவதுடன் கூடிய குடும்ப கதையாக அமைந்துள்ளது. பாடல்கள் வைரலானது ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கென் எழுதிய ‘வெட்டிங் சாங்’ பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல குடும்பத் திரைப்படம் என்ற விமர்சனங்களை பெற்று வருவதால் இப்படமும் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக அமையவுள்ளது. படத்தின் வசூல் அறிவிப்பு இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 16 நாட்களில் ரூ 240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/suriyas-vishwanath-and-sons-collects-rs-240-crore



