மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பசுமை மேலாண்மைத் திட்டம் சார்பில் ‘பட்டாம்பூச்சி மாதம்’ என்ற பெயரில், பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்று ‘மனித பட்டாம்பூச்சி’ வடிவத்தை உருவாக்கினர். ‘பலர் – ஒரே நோக்கம் – பசுமையான எதிர்காலம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி தோட்டத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் வருவதாகத் தெரிவித்தனர். குறிப்பாக மேகமலை பகுதிகளில் இருந்து பட்டாம்பூச்சிகள் வந்து சில காலம் தங்கி பின்னர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வதாகவும், இங்கு சுமார் 45 வகையான பட்டாம்பூச்சிகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். பட்டாம்பூச்சிகளின் சூழலியல் முக்கியத்துவம், மகரந்தச் சேர்க்கையில் அவற்றின் பங்கு, இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுரை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மனித பட்டாம்பூச்சி நிகழ்ச்சிக்கு அமெரிக்கன் கல்லூரி முதல்வரும் செயலருமான டாக்டர் ஜே. பால் ஜெயகர் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.பிஜூலா குமால், இயக்குநர் டாக்டர் பி.வெள்ளைத்துரை, பசுமை மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/environment/madurai-human-butterfly-created-by-500-students-together




