திருப்பதி, திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் இலவச தரிசன டோக்கன் தற்காலிக நிறுத்தம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க, திருப்பதியில் 3 இடங்களில் நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டோக்கன்கள் (SSD) வழங்கப்பட்டு வருகின்றன. டோக்கன் வழங்கப்படும் 3 முக்கிய இடங்கள் ஸ்ரீநிவாசம் காம்ப்ளக்ஸ்: திருப்பதி மத்திய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளது. விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ்: திருப்பதி இரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ளது. பூதேவி காம்ப்ளக்ஸ்: அலிபிரி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது (நடைபாதையாக வரும் பக்தர்களுக்கும் இங்கு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. 10 ஆயிரம் சர்வதரிசன டிக்கெட்டுகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், இன்றைய தினத்திற்கான 10 ஆயிரம் சர்வதரிசன டிக்கெட்டுகள் வெறும் 1 மணி நேரத்தில் தீர்ந்து போனதால், தொலைதூரத்தில் இருந்து வந்த பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பக்தர்கள் கூட்டம் அதிகம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டுமே வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். ஆனால், தற்போது கோடை விடுமுறை மற்றும் தொடர் விசேஷ நாட்கள் காரணமாக வாரத்தின் அனைத்து நாட்களிலுமே திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் வரலாறு காணாத வகையில் அலைமோதி வருகிறது. தரிசன டிக்கெட் ரத்து இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 2 ஆயிரம் தரிசனம் டிக்கெட் வழங்கப்பட்டது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப் பட்டதால் நாளைய தரிசனத்திற்கு வழங்கப்பட்ட இருந்த சர்வ தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரி யாமல் ஏராளமான பக்த ர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தரிசன டிக்கெட் வாங்குவது ரத்து செய்யப் பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் நேரடி இலவச தரிசனம் செய்ய திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றனர். நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/tirupati-temple-sees-surge-in-devotees-free-darshan-token-issue-suspended-temporarily




