சென்னை, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- மந்திரி ராஜ்நாத்சிங் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செப்டம்பர் 8 முதல் 10 வரை 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் என்ற நோக்கத்தோடு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என அரசுத்தரப்பு செய்திகள் கூறுகின்றன. தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை தலைவர்களைச் சந்தித்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், சிறையில் அடைக்கப்படுவதற்கும் அவர்களது படகுகள் உட்பட தனிப்பட்ட உடைமைகள் பறிக்கப்படுவதற்கும், கைப்பற்றப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-permanent-solution-must-be-found-for-the-attacks-on-tamil-nadu-fishermen-by-the-sri-lankan-navy-m-veerapandian




