மதுரை, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய், நாளை (திங்கட்கிழமை) மதுரை செல்கிறார். முதன்முறையாக வருகை தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதன்முறையாக விஜய், நாளை (திங்கட்கிழமை) மதுரை செல்ல உள்ளார். த.வெ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைக்கிறார். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இதற்காக அவர் அன்றைய தினம் தனி விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு, பகல் 11.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில், மதுரை அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மகப்பேறு சிகிச்சை வார்டுக்கு சென்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவிக்க இருக்கிறார். இதையொட்டி அரசு மருத்துவமனையில் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, மருத்துவமனை வளாகம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. காந்தி அருங்காட்சியகம் மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தில் சீரமைப்புப் பணிகள் பல மாதங்களாக நடந்தன. சீரமைப்பு பணிகள் முடிந்து, காந்தி அருங்காட்சியகம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் விஜய், காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கும் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதையடுத்து அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்கி விஜய் சற்று நேரம் ஓய்வு எடுக்கிறார். மீனாட்சி அம்மன் கோவில் மாலை 4 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார். கோவில் கும்பாபிஷேகம் கடந்த 17-ந்தேதி நடை பெற்ற நிலையில், அவர் அங்கு சென்று தரிசிப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழக முதல்-அமைச்சராக இருப்பவர், மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்ல இருக்கிறார். பலத்த போலீஸ் பாதுகாப்பு முதல்- அமைச்சர் வருகையையொட்டி மதுரை நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து, அரசு மருத்துவமனை மற்றும் காந்தி அருங்காட்சியகம் செல்லும் வழிகளில் சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தாய்மாமன் தங்க மோதிர திட்ட தொடக்கவிழா மற்றும் காந்தி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் பார்வையிடும் நிகழ்ச்சிகள் மட்டுமே தற்போது உறுதியாகி உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-madurai-tomorrow-heavy-police-security-across-the-city




