Doctor Vikatan: எனக்கு பாதங்களில் அடிக்கடி கால் ஆணி பிரச்னை வருகிறது. கால் ஆணிக்கான பிளாஸ்டர் ஒட்டினாலும் மீண்டும் மீண்டும் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பாத நோய் அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் பாத சிறப்பு மருத்துவர் என். சிவகுமார் பாத நோய் அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் பாத சிறப்பு மருத்துவர் என். சிவகுமார் கால் ஆணி (Corns/Calluses) என்பது பாதங்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் உராய்வினால் தோலின் மேல் அடுக்கு தடிமனாவதால் ஏற்படும் பொதுவான பாதிப்பு. பொருத்தமற்ற காலணிகள் அணிவது, அதாவது மிகவும் இறுக்கமான, குறுகிய அல்லது தட்டையான காலணிகளை அணிவது, அதிக நடைப்பயிற்சி அல்லது நின்றுகொண்டே வேலை செய்வது, அதன் விளைவாக பாதங்களின் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக அழுத்தம் விழுவது, பாத எலும்புகளின் அமைப்பில் பிறப்பிலேயே அல்லது விபத்தினால் ஏற்படும் மாற்றங்கள் (Bone spurs), கரடுமுரடான தரையில் தொடர்ந்து வெறும் காலில் நடக்கும்போது தோல் தடிமனாவது போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம். அடிக்கடி இந்தப் பிரச்னை ஏற்படும்போது, கடுமையான வலி இருக்கும் என்பதால் உங்களால் நடக்க முடியாது. அது உங்களுக்கு நிற்பதற்கும் நடப்பதற்கும் பெரும் சிரமத்தைக் கொடுக்கும். ஆனால், இதற்குத் தீர்வு என்பது பிளாஸ்டர் ஒட்டுவது அல்ல என்பதுதான் எதார்த்தமான உண்மை. முதலில் அந்த ஆணிக்காலை அகற்றுவதற்கான வழிமுறைகளைச் செய்வதுதான் சரியான சிகிச்சையாக இருக்கும். பாதத்தின் அந்தப் பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். எனவே, அங்கு அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பாதத்தின் அழுத்தத்தைக் குறைக்கும் பிரத்யேகக் காலணிகளைப் (Offloading footwear) பயன்படுத்த வேண்டும். அந்தக் காலணி, ஆணிக்கால் உள்ள இடத்தில் அழுத்தம் கொடுக்காதவாறு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாதத்தின் அந்தப் பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். எனவே, அங்கு அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப பாதிக்கும் கால் ஆணி. நிரந்தரமாக மீளும் வழிகள்! |சரும நலம் - 25 கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பார்வையைச் சீரமைக்க நாம் எப்படித் தகுந்த கண்ணாடி அணிவதைப் பரிந்துரைக்கிறோமோ, அதேபோலத்தான் கால்களில் குறைபாடு அல்லது பாதிப்பு உள்ளவர்களுக்கும் சரியான காலணிகள் நிச்சயம் தீர்வளிக்கும். உங்களது காலின் தன்மைக்கு ஏற்பவும், பாதத்தின் வடிவத்திற்கு ஏற்பவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Customized) காலணிகளைத் தயாரித்து அணிய வேண்டும். கடைகளில் விற்கப்படும் ரெடிமேடு காலணிகளை (Readymade footwear) அணிந்தால், இந்தப் பிரச்னை உங்களுக்கு நிரந்தரமாக குணமாகாமல், மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். மருத்துவரைச் சந்தித்து இது குறித்த மற்ற தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/health/the-recurring-trouble-of-corns-is-there-no-permanent-solution




